வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அப்படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. திடீரென சுற்றுலாப் படகின்மீது ருபோஷி-9 எனும் சரக்குக் கப்பல் மோதியது. படகில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சிலர் உயிரை காப்பாற்ற தண்ணீரில் குதித்தனர். ஆனால் மிக வேகமாக சரக்குக் கப்பல் வந்ததால் அனைவரும் குதிக்கும் முன்னரே கப்பல் படகை மூழ்கடித்துவிட்டது.