சனி பகவான் என்றாலே பலருக்கும் அச்சம் எழும். அதுவும் சனி பெயர்ச்சி நடக்கப் போகிறது என்றாலே பலரது மனதிலும் ஒருவித பயமும், இப்பெயர்ச்சியால் நமக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலும் இருக்கும். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கும். ஏனெனில் 2 1/2 ஆண்டுகள் கழித்து சனி பகவான் இந்த ஆண்டில் தனது ராசியை மாற்றுகிறார். அதுவும் இந்த ஆண்டில் சனி பகவான் இருமுறை ராசியை மாற்றுகிறார். ஒருமுறை 2022 ஏப்ரல் 29 அன்று மற்றும் இரண்டாவதாக ஜூலை 12 அன்று மாற்றுகிறார்.இந்த சனி பெயர்ச்சியால் இந்த ஆண்டு 8 ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள். சனி பகவான் ஒரு வருடத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுவதற்கு என்ன காரணம் என்பதையும், எந்த ராசியில் பாதி இருப்பார் என்றும், எந்த ராசியில் மீதி இருப்பார் என்பதையும் இப்போது விரிவாக காண்போம்இந்த காலத்தில் சனி பகவான் மகர ராசியில் இருப்பார். இதனால் தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மீது சனி பாதி பாதியாகவும், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் மீது சனி தையாகவும் இருப்பார். இதில் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம், மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாம் கட்டம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு முதல் கட்டம்.
2022 ஏப்ரல் 29 முதல் 2022 ஜூலை 11 வரை
இந்த காலகட்டத்தில் சனி கும்ப ராசிக்கு இடம் மாறி சஞ்சரிப்பார். இப்போது மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் சனி பாதி பாதியாக இருக்கும். இதில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமாகவும், கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும், மீன ராசிக்காரர்களுக்கு முதல் கட்டமாகவும் இருக்கும். மறுபுறம் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி காலமாகும். அதோடு இக்காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுவார்கள் மற்றும் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் சனி தையாவில் இருந்து விடுபடுவார்கள்.
2022 ஜூலை 12 முதல் 2022 டிசம்பர் 31 வரை
2022 ஆம் ஆண்டில் சனி பகவான் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாக கும்ப ராசியில் இருப்பார். அதைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்திற்கு செல்வார். பின் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி அன்று சனி பகவான் மகரத்தில் மீண்டும் நேர்கதியாக பெயர்ச்சி அடைவார். 2023 ஜனவரி 17 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இக்கால கட்டத்தில் ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட்ட ராசிக்காரர்களான தனுசு, மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் மீண்டும் சனியால் பாதிக்கப்படுவார்கள்.
2022-ல் 8 ராசிக்காரர்களைக் கூர்ந்து கவனிக்கும் சனி
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2022 ஆம் ஆண்டில் மிதுனம், கடகம், துலாம் விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களை சனி பகவான் கூர்ந்து கவனிக்கப் போகிறார். அதே வேளையில் மேஷம், ரிஷபம், சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுவார்கள்.