இந்த ஒரு வேர் உங்கள் வீட்டு பீரோவில் இப்படி இருந்தால் போதும். கட்டுக்கட்டாக பணம் கட்டுக்கடங்காமல் சேர தொடங்கிவிடும்.
நிறைய பேருக்கு, இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையை பிரச்சினைகள் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற ஒரு பொருள் என்றால் அது பணம் தான். பணம் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த காலத்தில் எல்லாம் பார்க்கும் போது, ‘பணத்திற்கும்’ மதிப்பு இருந்தது. முக்கியத்துவம் இருந்தது. இல்லை என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் இந்த காலத்தில் ‘பணம் மட்டுமே’ முக்கியமாக பார்க்கப்படுகிறது. நம்முடைய தேவைக்காகவும் நம் குழந்தைகளின் தேவைக்காகவும் ஓடிஓடி பணத்தை சம்பாதிக்கிறோம்.ஓடி ஓடி கஷ்டப்பட்டு உழைப்பவர்களிடம் பணம் தங்குவது கிடையாது. சிக்கனமாக செலவு செய்பவர்களிடமும் பணம் தங்குவது கிடையாது. ஆனால் உழைக்காமல், போன போக்கில் அதிர்ஷ்டத்தின் மூலம் சம்பாதிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றார்கள். பணத்தை வாரி இறைத்து செலவு செய்பவர்களின் கைகளில் பணம் தாறுமாறாக விளையாடுகின்றது. இதற்கெல்லாம் என்ன காரணம். அதிர்ஷ்டம் தான்.அந்த அதிர்ஷ்டத்தை நம் பக்கத்தில் நெருங்க விடாமல், நம்மை சுற்றி இருக்கக் கூடிய தரித்திர வட்டம் தடுத்துவிடும். இந்த தரித்திர வட்டத்தை உடைப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சிறிய பரிகாரம் தான் இது. ஓடி ஓடி கஷ்ட படுறீங்க. இந்த ஒரு பரிகாரத்தை செய்துவிட்டு கஷ்டப்பட்டு பாருங்கள். உங்கள் கஷ்டப்படுவதற்கான பலன் உடனே கிடைக்கும்.குப்பைமேனி வேர். நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீங்க. ரோட்டோரங்களில் முளைக்கக் கூடிய மூலிகை செடி இது. அந்த குப்பைமேனி வேரை பிடுங்கி எடுக்க வேண்டும். குப்பைமேனி வேர் பிடுங்குவதற்கு முன்பு குப்பைமேனி செடியை சுற்றி மஞ்சள் நீரைத் தெளித்து விட்டு ‘நசி நசி மூலிகை சாபம் நசி’ என்ற மந்திரத்தை சொல்லி, இந்த வேரை நல்லதுக்காக மட்டும் பயன்படுத்த போகின்றோம் என்று சொல்லி, அதற்குப் பின்பு செடியை பிடுங்கி கொள்ளுங்கள்.