Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

வலிமை’ பட டிக்கெட் – கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள்!”- அஜித் ரசிகர்கள் புகார்

0

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட்டில் மிகப்பெரிய கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக அஜித் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அஜித்குமார் ரசிகர் கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்துள்ள புகாரில், “சினிமாவில் தனக்கென தனி முத்திரையோடு நடிக்கும் அஜித்குமாரின் ‘வலிமை’ படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது.கோவை மாவட்டத்தில் இந்தப் படத்தை திரையிட உரிமம் பெற்றுள்ள விநியோகஸ்தர், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 12-ம் தேதி நள்ளிரவு 1 மணி முதலே, அரசு அனுமதியின்றி படத்தை வெளியிட்டு அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.தியேட்டர் உரிமையாளர்களுடன் இணைந்து அரசு ரூ.120 ஆக நிர்ணயித்த கட்டணத்தை, ரூ.1,000 என்று நிர்ணயித்து வசூலித்து வருகின்றனர்.
டிக்கெட் ரூ.120-க்கு விற்றால், நாளொன்றுக்கு சுமார் ரூ.2.4 கோடி வருமானம் கிடைக்கும். ரூ.1,000-க்கு விற்பதால், நாளொன்றுக்கு சுமார் ரூ.20 கோடி வருமானம் கிடைக்கும். அரசுக்கு இதன் மூலம் தினசரி ரூ.17 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலிக்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்