ஏற்கனவே ஒரு வழக்கு ரத்தான நிலையில் இதில் பெயில் பெற்று மாரிதாஸ் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இதன் விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் மாரிதாஸுக்கு மீண்டும் செக் வைக்கும் வகையில் மூன்றாவது கேஸ் போடப்பட்டுள்ளது. முதல் கேஸில் இவர் வெளியே வருவார் என்பது உறுதியான நிலையில் எப்படி மற்ற கேஸில் நடவடிக்கை எடுக்கப்பட்டதே அதேபோல் இரண்டாவது கேஸில் வெளியே வர வாய்ப்புள்ளதால் இப்போது மூன்றாவது கேஸ் போடப்பட்டுள்ளது.அதன்படி இதனால் இரண்டாவது வழக்கில் மாரிதாஸ் வெளியே வந்தாலும் மூன்றாவது வழக்கில் பெயில் கிடைப்பது மிக கடினம் என்கிறார்கள். மூன்றாவது கேஸ் கொஞ்சம் சிக்கலானது.இதே நிலை நீடித்தால் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.