Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ்

0

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்!

இப்போது ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து வசதிகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவைகள் குறித்த முக்கிய விஷயங்களை விரிவாக காணலாம்.

தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் ஒரு முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுவதால் இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாகவும், புதுப்பிப்பு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் ரேஷன் அட்டைகளில் ஏதேனும் சில மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் அலுவலம் சென்று அலையத்தேவையில்லை. இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே இந்த சேவைகளை செய்வதற்கு மொபைல் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், மத்திய அரசு மேரா ரேஷன் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். மத்திய அரசின் இந்த மொபைல் ஆப் பயன்பாடு 10 மொழிகளில் கிடைக்கிறது. இந்த ஆப் புதிய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்வது, ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல வசதிகளை வழங்குகிறது.

அதே நேரத்தில் வேலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் பிற மாநிலங்களுக்கு இடம் பெயரும் மக்களும் இந்த செயலியை பயன்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். இது மட்டுமின்றி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்பில் இடம்பெயர்வு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர் தங்கள் இடம்பெயர்வு விவரங்களை சரிபார்க்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்