Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி நம்ம ஊரு செய்தி

திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் நீலகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 56 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி நேரம் முடிந்த பிறகு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவது ஆசிரியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் கூட்டணி எச்சரித்துள்ளது.

நர்ஸ் கணவர் உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 29:
திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோதி பிரபாகர் (53) உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
அவரது மனைவி கிளாடிஸ் பிரேமா சுந்தரி (51) கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்புநாதபுரம் அருகே தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 29:
திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் அருகே உள்ள பேரூர் ஹரிஜன் தெருவை சேர்ந்தவர் சங்கரன் (60). தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
முதலில் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சோமரசம்பேட்டை அருகே 23 வயது இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 29:
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனாம் புலியூர் போதாஊர் வடக்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (23).
உடல்நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருவரங்கத்தில் மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 29:
திருவரங்கம் வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கனகு (78).
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 29:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயராஜ் (53), ஒரு வழக்கு தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கே.கே. நகரில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
திருச்சி, ஜூலை 29:
திருச்சி காஜாமலை டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (56). அவரது தாய் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது, வீடு வாடகைக்கு இருப்பதாகக் கூறி வந்த நான்கு மர்ம நபர்கள் பேச்சில் ஈடுபடுத்தினர்.
அப்போது, அவரின் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

கத்தி காட்டி வழிப்பறி – ரவுடி கைது
திருச்சி, ஜூலை 29:
திருச்சி தெப்பக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த விஜயகுமார் (49), காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
குப்பங்குளம் டாஸ்மாக் அருகே நடந்து சென்றபோது, தென்னூர் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்ற காட்டு ராஜா (25) என்பவர் கத்தி காட்டி மிரட்டி, விஜயகுமாரிடம் இருந்த ₹500-ஐ பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்