Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ தரத்திற்கு மாற்ற திட்டம்… ₹6,600 கோடி நிதியுதவி கோரி மத்திய அரசை அணுகிய தமிழக அரசு

சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கான நிதியுதவியை மத்திய அரசிடம் கோரி ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கை மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டத்தின்படி, தற்போதுள்ள பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தி, மெட்ரோ ரயில் தரத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு திட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. திட்ட நிதிக்காக சர்வதேச நிதி நிறுவனங்களிடம் குறைந்த வட்டியில் கடன் பெறும் வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
நிர்வாக மாற்றத்திற்கான ஒப்பந்த ஆவணம் தற்போது ரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், அடுத்த சில வாரங்களில் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்