திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பார்க்கில் தன் கணவருடன் வாக்கிங் சென்றுள்ளார் தன் கணவரை நடக்கச் சொல்லிவிட்டு அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்து உள்ளார் இதை கண்காணித்து கொண்டிருந்த இரண்டு நபர்கள் பின்பக்கமாக வந்து அந்தப் பெண் அணிந்திருந்த நகையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர் அந்தப் பெண் இரண்டு நபர்களையும் அடையாளம் கண்டு கொண்டார் அந்த அடையாளங்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் இருவரும் பிடிபட்டனர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்