திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 05.01.2025 அன்று நிறைவடைந்ததும், *ஊராட்சி மன்ற கட்டடித்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்களை நீக்கம் செய்திட* அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீக்கம் செய்யாமல் ஊராட்சி செயலாளர்கள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சிக்கு சென்று உரிய ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை நீக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்