திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஜுலை.29 மாலை 3:30 மணியளவில் தற்காலிக பணியில் சிவக்குமார் ஆசிரியர் மாணவர் ஒருவரால் வெட்டப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவத்தால் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பலமுறை காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தும் தொடர்ந்து அலட்சியப் போக்கில் நடந்து கொண்டதால் தீவும் இவ்வகையான போக்கு நீடித்துக் கொண்டே இருக்கின்றது. அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் பள்ளி அமைந்திருக்கும் இடங்களில் அவ்வப்போது அதிகமான பிரச்சனைகள் வருகின்றது அது பள்ளிக்கு நன்கு தெரிந்தும் வெளியில் சொல்லாமல் மூடி மறைக்கின்ற வேலையில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.