Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சுய உதவிக்குழு கடன் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

0

கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மகளிர் சுய உதவுக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. கொரோனா நெருக்கடி, நிதி நெருக்கடி, தற்போது மழை வெள்ளம் பாதிப்பு ஆகியவற்றால் சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதமாகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை ரத்து செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்