Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி முன்னாள் கோட்ட ஆய்வாளரின் அலைபேசி அழைப்பை கேட்டாலே அலறும் அளவைத்துறையினர்

0

*”மழை விட்டாலும் தூவானம் விடவில்லை”* என்ற பழமொழிக்கு ஏற்ப

“பெரிய மழை பெய்து ஓய்ந்த பிறகும், சில சமயங்களில் மழை தூறல் இருந்து கொண்டேயிருக்கும், *மறுபடியும் பெரிய மழை வந்துவிடுமா என்ற அச்சம் நம் மனதில்* இருந்து கொண்டேயிருக்கும்.”

அதே போன்று பல கோடிகளை வசூல் செய்து மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கிய விவரத்தில் மூளையாக செயல்பட்ட *கோட்ட ஆய்வாளர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும்* அங்கிருந்து கொண்டே அலைபேசியின் அழைப்பில் இருந்து கொண்டே தனது சகாக்கள் மூலமாக பல சட்ட விரோத செயல்களை வருவாய் துறையில் செய்து வருகின்றார்.

திருச்சிக்கு பதவி உயர்வு பெற்று உதவி இயக்குனராக மீண்டும் பணிக்கு வந்தால் தாங்கள் எந்த வகையிலும் *பழி வாங்கப்பட கூடும்* என்ற அச்சத்தில் அளவைத் துறையினர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே இடத்தில் *மூன்றாண்டுகளுக்கு மேல் பணி செய்யும்* அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு வழங்கியுள்ள நிலையில், முன்னாள் கோட்ட ஆய்வாளரின் *சிஷ்ய பிள்ளைகள் பலரும் மூன்றாண்டுகளுக்கு மேலாக* ஒரே வட்டத்தில்
பணி செய்து கொண்டே வசூல் வேட்டை செய்யும் தகவலுடன் மேலிடத்திற்கு புகார் சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்