திருச்சி கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கிய விவாகரத்தில் முக்கிய நபரான நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம்….
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையின் அன்றாட பணிகளை கூட அதிரடியாக செய்ய நினைக்கும் D.R.O. அபிராமி அவர்கள்…
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் மற்றும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தில் முறைகேடாக பட்டா பெயர் மாற்றம் செய்த விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கொடுத்து புகார் மனுவின் மீது கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருவது ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு மட்டுமல்லாது U.D.R. பட்டா பெயரில் தவறை திருத்தம் செய்வதற்கு *மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில்* திருச்சி மேற்கு வட்டத்தில் நடந்த பல்வேறு பட்டா முறைகேடுகள் குறித்த விரிவான புகார் மனு மற்றும் ஆதார ஆவணங்களுடன் பலமுறை செய்தி வெளியீட்டும், அது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆன்மீகவாதிகள். கோவில் சொத்துக்களை தனிநபர்களிடமிருந்து மீட்டு கோவிலுக்கு கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறார்கள். மேலும் இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் வெளியிட தயாராக இருக்கிறது. T NEWS TAMIL.