திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவர்ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவரது மனைவி சரோஜா (வயது 68) இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக சரோஜா இருந்து உள்ளார். இந்த நிலையில் சரோஜா வீட்டின் கதவை தாழ்பாள் போட்டு விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார். அப்பொழுது இன்று விடியற்காலை 2 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டின் கதவை வேகமாக தட்டி உள்ளனர்.தூங்கிக் கொண்டிருந்த சரோஜா திடீரென கண் விழித்து கதவை திறந்து உள்ளார். அப்பொழுது மர்ம ஆசாமிகள் சரோஜாவை தள்ளி கொண்டு வீட்டுக்குள் வேகமாக உள்ளே புகுந்தனர்.இதனைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்த சரோஜா யார் நீங்கள் என்று கேட்பதற்குள் மர்ம ஆசாமைகள் திடீரென்று சரோஜாவை சரமரியாக உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் சரோஜா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்தார். பிறகு மர்ம ஆசாமிகள கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். பிறகு மயங்கி கிடந்த மூதாட்டியை காலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சரோஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினார்கள்.இதற்கிடையில் போலீசார் எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் திடீரென்று வாகன சோதனை நடத்தினார்கள் இருந்தபோதிலும் கொள்ளை கும்பல் போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு எங்கேயோ தப்பி ஓடிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி மண்டையை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார். இந்த சம்பவம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.