Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு விவகாரம் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன

0

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருச்சி வருகை புரிந்தார்
திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அப்போது அவர் கூறியதாவது:-
பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் ஏற்கெனவே கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை ஆகும்.
எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும்

தி.மு.க கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் இந்த கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் (தென்னரசு) பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன் பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசு சிலை வைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டம் அரசு நடத்தியதா அல்லது தி.மு.க நடத்தியதா என தெரியவில்லை.
அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என தான் பேசியுள்ளார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும்.
தி.மு.க தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.

இடைத்தேர்தல் என்பது எந்த கட்சியின் பலத்தையும் நிரூபிப்பதற்கானது அல்ல.

பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

அ.தி.மு.க ஈ.பி.எஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்