Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி சிட்டி நியூஸ்

0

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழக முதலமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் செ.கு.தமிழரசன் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கை வயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சமூக விரோதிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், வேங்கை வயல் கிராமத்தில் கிராம பட்டியல் இன மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு சார்பு உதவிகளை உடனடியாக வழங்க கூறி இந்திய குடியரசு கட்சி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், மோகன்ராஜ்,,விமல்மாநில நிர்வாகிகள் பிரபு,மங்கா, கௌரிசங்கர் அன்புவேந்தன், ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் செ.கு. தமிழரசன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் முத்துக்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக செ.கு. தமிழரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வேங்கை வயல் கிராமத்தில் நடந்த சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. போர் நடக்கும் போதும் கூட ஒரு விதிமுறையை கடைப்பிடிப்பார்கள். ஆனால் இங்கு இந்த செயல் நடந்தது கொலைக்கு சமமாகும். இந்த பிரச்சனையை நாங்கள் சும்மா விட மாட்டோம். ஐக்கிய நாட்டு சபை வரை கொண்டு செல்வோம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களுக்கு அநீதி நடக்கும் பொழுது அரசு தட்டி கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு செகு. தமிழரசன் கூறினார்.

 

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய்யை பாட்டிலுடன் வந்த வாலிபர்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்பொழுது கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். அப்பொழுது ஒரு வாலிபர் கையில் பேக்குடன் வந்தார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பேக்கை வாங்கி சோதனை செய்து பார்த்த பொழுது அதில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் கேனில் மண்ணெண்ணெய்யை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றி சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 30) என்பதும், நீண்ட காலமாக பட்டா கேட்டு மனு கொடுத்தும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ய வந்தேன் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அவரிடம் கோரிக்கை மனு வாங்கிக் கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர் இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்