திருச்சியில் பரிதாபம்
டாஸ்மாக் கடையில்மது குடித்த இரண்டு பேர் சாவு போலீசார் விசாரணை
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் டாஸ்மார்க் கடையில் மது குடித்த இரண்டு பேர் பரிதாபமாக இறந்தார்கள் இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் திருச்சி வடக்கு காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர் மணி வயது 56 இவர் குடிப்பழக்கம் உள்ளவர் சம்பவத்தன்று இவர் பாலக்கரை பகுதியில் உள்ள மணல் வாரி துறை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே
திருச்சியில்பட்டதாரி வாலிபர் தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 60)இவரது மகன் விக்னேஷ் (வயது 26 )பட்டதாரியான இவர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் மனவிரக்த்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீடடில் யாரும் இல்லாத பொழுது சேலையால் மின்விசிறியில்
தூக்கு போட்டு இறந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
திருச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திடீர் தற்கொலை
திருச்சியை அடுத்த துவாக்குடி வாளவந்தான்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். டிரைவரான இவர் கீர்த்தனா(வயது 21) என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை குழந்தை இல்லை. இது கீர்த்தனாவுக்கு பெரும் கவலையாக மாறியது. அதைத்தொடர்ந்து தனது கவலையை மறப்பதற்கான கீர்த்தனா வேலைக்கு செல்வதற்கு முடிவு எடுத்துள்ளார். இது பற்றி தனது கணவரிடம் கூறிய போது அவர் மறுத்துவிட்டார. பின்னர் அவர் வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் கீர்த்தனா அருகாமையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் தாயின் சேலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக கீர்த்தனாவின் தாய் ராணி துவாக்குடி போலீஸ் புகார் செய்தார். இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விடுகின்றனர்.
நாளை74-வது குடியரசு தின விழா
திருச்சியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு
1,000 போலீசார் விடிய விடிய சோதனை
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகர பொது மக்கள் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழாவினை சிறப்பாகவும், பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி, இன்று மாலை முதல் திருச்சி மாநகரில் உள்ள ஒரு சர்வதேச விமானநிலையம், ஒரு ரெயில்வே சந்திப்பு, 6 ரெயில்நிலையங்கள், 02 பேருந்து நிலையங்கள், 10 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களை கண்காணிக்கவும், வாகன தணிக்கை செய்ய 24 முக்கிய இடங்கள், 9 சோதனை சாவடிகள் ஆகியவை முக்கிய இடங்களில் வாகன தணிக்கை மற்றும் சந்தேக நபர்களை தணிக்கை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்ப மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகரணங்களுடன் முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாகன தணிக்கையின் போது சந்தேகம்படும்படி நபர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்களை விசாரணை செய்து உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகரில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவைகளில் வெளியாட்கள் யாரும் சந்தேகம் படும்படியாக தங்கியுள்ளார்களா என தீவிரமாக சோதனை மேற்கொள்ளவும், குடியரசு தினத்தன்று சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்கவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் சார்பில் குடியரசு தின விழா கொண்டப்படும் இடமான திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாநகரில் 74வது குடியரசு தினத்தன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை ஆணையர், மாநகர ஆயுதப்படை, 7 சரக காவல் உதவி ஆணையர்கள், 40 காவல் ஆய்வாளர்கள் என திருச்சி மாநகரத்தில் சுமார் 950 காவலர்கள்என மொத்தம் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று மாலை முதல் ஈடுப்படுத்தப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதேபோன்று திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர் மேலும் காவேரி கொள்ளிடம் பாலத்தில் துப்பாக்கியந்தி போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.