எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சேவியர் தலைமையில் 7 8 2022 அன்று ராமச்சந்திர நகரில் உள்ள கார்மல் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி மக்கள் சார்ந்த கோரிக்கைகள் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது,
எடமலைப்பட்டி புதூர் மக்கள் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு
(1.எடமலைப்பட்டி புதூர் அனைத்து தெருக்களிலும் உள்ள பாதாள சாக்கடை புலிகளை செப்பண்ணிட்டு போக்குவரத்திற்கு ஏதுவாக சரி செய்து தர வேண்டும்,
2. பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
3. ரெட்டமலை ரோடு சரி செய்து கொடுத்திட வேண்டும்.
4. கேகே நகருக்கு இணைப்பு சாலை அமைத்திட வேண்டும்.
5. 62வது வார்டு துப்புரவு பணியாளர்கள் 25 பேர் வேலை செய்வதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
6. கொசு மருந்து அடித்திட வேண்டும்.
7. மூன்று கவுன்சிலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்திட வேண்டும்.
8. துளசிங்க நகரில் சாலையில் மாடுகள் தெரிவதால் போக்குவரத்து பிரச்சனை ஏற்படுகிறது அதனை சரி செய்ய வேண்டும்.
9. எடமலைப்பட்டி புதூரில் வார சந்தை நடந்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.
10. கிருஷ்ணாபுரம் பகுதியில் தொடர்ச்சியாக மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது அதை சரி செய்திட வேண்டும் மற்றும் சாக்கடை சரிவர சுத்தம் செய்திட வேண்டும்.
11. அம்மன் நகருக்கு குடிநீர் இணைப்பு கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அரசு அதிகாரிகளும் சந்தித்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகளான தலைவர் சேவியர் ராஜ் பொதுச் செயலாளர் பிரபாகரன் பொருளாளர் மீனாட்சி சுந்தரம் துணைத் தலைவர் ராஜசேகரன் இணைச் செயலாளர் ஞானசேகர் புதிய இணைச் செயலாளர் மணிவேல் அண்ணாதுரை மேலும் நகர் நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.