Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் இந்து அறநிலையத் துறையில் தேர் செய்வதில் ஊழலா?..

0

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோவில் வருகிற 11/6 /2022 அன்று வைகாசி பெருந் திருவிழாவில் தேர் பவனி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் தேர்பவனி மிகவும் சிறப்பான திருவிழாவாக இருந்து வருகிறது இந்தநிலையில் கடந்த இரண்டு வருடமாக இந்த திருவிழா நடைபெறவில்லை கோரானா காலமென்பதால் நடைபெறவில்லை. தற்போது இந்த திருவிழாவிற்காக சமீபத்தில் பல லட்சம் செலவு செய்து செய்யப்பட்ட தேர் தற்போது தேர்பவனி காக பயன்படுத்த உள்ளது. ஆனால் தேரின் நிலையோ பல லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டப்பட்டு உள்ள நிலையில். இப்போது தேரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதற்காக செலவு செய்த தொகை பல லட்சங்களை கணக்கு காட்டப்பட்டுள்ளது ஆனால் தேர் செய்து இரண்டே வருடங்களில் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது இதிலுமா ஊழல் இந்து அறநிலையத்துறை எல்லா செயல்களும் சரியாக செய்வதுபோல காண்பிக்கும் ஆனால் உள்ளே ஊழல் நடைபெற்றுள்ளதாக இந்து முன்னணி அமைப்பினர் கருதுகின்றனர். உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இதைப்பற்றி முழுமையாக விசாரணை நடத்தி இந்தத் தேரை செய்தவர் மற்றும் இதற்கு செய்த செலவு எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி அதில் தவறு செய்தவர்கள் மீதும் ஊழல் செய்தவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் காலம் தாழ்த்தாமல்

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்