திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நமது தோழர். திரு. மணிவேல் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும், அன்னாரை தற்காலிகப் பணி நீக்கம் செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 26.05.2022 அன்று மாலை 5.00 மணிக்கு துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற உள்ளது. எனவே திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து வட்ட கிளை மற்றும் நகர கிளை சார்பில் உடனடியாக இச்சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மேற்படி தோழர். மணிவேல் அவர்களை மீள பணியமர்த்த கோரியும் மாபெரும் மாவட்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பதிவறை எழுத்தர்கள் மற்றும் கணினி இயக்குபவர்கள் என அனைத்து ஊழியர்களும் ஒன்று இணைந்து குறைந்தது வட்ட கிளைக்கு ஒரு வேன் மூலம் ஊழியர்களை ஒன்றுதிரட்டி இம்மாவட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தவறாது கலந்து கொண்டு அன்னாரை மீள பணியமர்த்திட உங்கள் அனைவர் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
என்றென்றும் தோழமையுடன், மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.