உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் மத்திய அரசு திட்டமான ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ மாவட்ட அளவில் சமூக நலத்துறை அலுவலர் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’– ‘மைய நிர்வாகி’ மற்றும் ‘மூத்த ஆலோசகர்’ என இரு பணியிடங்கள் காலியாக உள்ளன.
‘மைய நிர்வாகி’ பணியிடத்துக்கு 04/05/2022 அன்று மாவட்ட சமூக நல அலுவலரால் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு சங்கீதா என்ற பெண்ணிடம் பேரம் பேசி முடிக்கப்பட்டு அவருக்கே பணி வழங்க முடிவு செய்துவிட்டு, கண்துடைப்புக்காக நேர்காணல் என அறிவித்துள்ளாராம் மாவட்ட சமூக நல அலுவலர். சம்மந்தப்பட்ட பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட சமூக நல அலுவலர் நேர்காணல் அழைப்பு கடிதம் கையில் கிடைத்துவிட்டதா என்பது வரை விசாரித்துள்ளாராம். இருவரது செல்போன் ‘கால் டீடெயில்’ எடுத்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.