கருமா சித்து விளையாட்டை தொடங்கியது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதலுனுடன் பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது தந்தையால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறியும், பாதுகாப்புதரக்கோரியும் மனு ஒன்றை அளித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர், சேகர் பாபு. இவருக்கு ஜெயகல்யாணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி இன்று(மார்ச் 7) சதீஷ் என்பவரைப் பெங்களூருவில் திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகம் சென்று மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்க்கும் தந்தை சேகர் பாபுவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும்; அதனால் அவர்களிடமிருந்து காப்பாற்றுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நானும் சதீஷும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளோம். எனது பெற்றோர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே சதீஷை தமிழ்நாடு காவல் துறையினர் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்தனர். நான் ஒரு மேஜர், எனது முழு விருப்பத்துடன் தான் சதீஷை திருமணம் செய்துகொண்டுள்ளேன். தமிழ்நாட்டிற்குள் சென்றால் எங்களைக் கொன்று விடுவதாக எனது பெற்றோர் மிரட்டுகின்றனர். எனவே, கர்நாடக காவல்துறையிடம் பாதுகாப்புக்கோரி மனு அளித்துள்ளோம்’ எனக் கூறினார்.
காதலுக்காக கர்நாடகா சென்ற அமைச்சர் சேகர் பாபுவின் மகள்!
இவர்கள் இருவருக்கும் இன்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. மேலும் இதைக் கர்நாடகா இந்து அமைப்பினர் முன்னின்று நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.