Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

டி – ஷர்ட் மற்றும் லுங்கி’யில் இருந்தவரை, வேனில் ஏற்றிச் அழைத்துச் சென்றனர். முன்னாள் அமைச்சர்…..

0

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பல மணி நேர அலைக்கழிப்புக்கு பின், நள்ளிரவில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கள்ள ஓட்டு போட முயன்றதாக, தி.மு.க., தொண்டர் நரேஷ், 45, என்பவரை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 61, பிடித்தார்.

அவருடன், 40க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினரும் இருந்தனர். அவர்கள் நரேஷின் சட்டையை கழற்றச் சொல்லி, கைகளை பின்பக்கம் கட்டி, சாலையில் இழுத்துச் சென்று, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து, தண்டையார்பேட்டை போலீசார், கொலை மிரட்டல், அரை நிர்வாணப்படுத்துதல் உட்பட, எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில், சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் ஜெயகுமாரை நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், துணை கமிஷனர் சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.சாலை மறியல்’டி – ஷர்ட் மற்றும் லுங்கி’யில் இருந்தவரை, வேனில் ஏற்றிச் அழைத்துச் சென்றனர்.

எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் சொல்லப்படவில்லை.நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறார் என, தகவல் பரவியதும், ஜெயகுமார் மகன் முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் குவிந்தனர்.இதனால், அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. அதற்கு ஏற்ப, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தகவல் வந்ததும், நீதிமன்றம் முன் அ.தி.மு.க.,வினர் குவிந்தனர்; போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.கோரிக்கைஇதற்கிடையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஜெயகுமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பின் இரவு, 12:00 மணியளவில், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.ஜெயகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உடனடியாக ஜாமின் வழங்க கோரிக்கை விடுத்தனர். அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மார்ச் 7 வரை, ஜெயகுமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ந நள்ளிரவு 2:30 மணியளவில் ஜெயகுமார், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்