திமுக அரசு மக்களை நம்பிக்கை மோசடி செய்து வருகிறது. திமுக உடன் சேர்ந்து ஒரு தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு…..
திமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய கடுமையான அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் எடுத்திருக்கும் உத்திதான் சமூக நீதி கூட்டமைப்பு” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 53து நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, வைத்தியலிங்கம், கே.பி. முனுசாமி, வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இதனைத் தொடர்ந்து செய்தியளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. திமுக மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சமூக நீதி கூட்டமைப்பு என்ற உத்தியை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளனர். திமுகவில் பாதி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. விரைவில் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும்.
எதிர் வரும் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றிபெறும். தேர்தல் காலத்தில், தமிழ் ஈழம், சமூக நீதி என்ற பல யுக்தியை திமுக கையில் எடுக்கிறது. அதை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை, அருகதையில்லை என்றார். சமூக நீதிக்கு ஆபத்தில்லாமல் அதிமுக பாதுகாத்து வைத்திருக்கிறது. இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்ததோடு அதனை பாதுகாத்தவர் ஜெயலலிதா. ஆனால், திமுக அரசு மக்களை நம்பிக்கை மோசடி செய்து வருகிறது. திமுக உடன் சேர்ந்து ஒரு தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு, தமிழன் தமிழன் என்று சொன்னால் தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ராகுல் காந்தி தமிழன் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரம் இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.