உங்களுக்கு சால்வை’ய போடணும்..” சென்னையில் கட்சி அலுவலகம் அருகே நின்ற திமுக வட்ட செயலாளர்.. மடிப்பாக்கம், ராம் நகரைச் சேர்ந்தவர் செல்வம். திமுகவின் 188-ஆவது வாா்டு பகுதிச் செயலாளராக உள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை மர்ம நபர்கள் ஐந்து பேர் வாழ்த்து தெரிவிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து அரிவாளாள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் அலறி துடித்த செல்வம் அங்கேயே நிலைகுலைந்து கீழே சரிந்துள்ளார். செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தோதலில் திமுக சாா்பில் 188-ஆவது வாா்டில் போட்டியிட செல்வமும், அவா் மனைவி சபீனாவும் விருப்ப மனு அளித்திருப்பது தெரியவந்தது.
இதே போல் வேறு சிலரும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். இதற்கும் கொலைச் சம்பவத்துக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக செல்வம் கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.