தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஜவுளி கடைகளில் ஒன்றான திகழ்ந்து வரும் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் வங்கியால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் ரீதியாக வங்கிகளில் கடன் பெறுவது வழக்கமாக நடைபெற்று வரும் ஒன்றுதான். அந்த வகையில் தற்போது தமிழகத்தின் மிகவும் பிரமாண்டமான ஜவுளி கடைகளில் ஒன்றாக விளங்க கூடிய சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கியில் ரூ.120 கோடி கடன் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு பெற்ற கடனை இதுவரை திருப்பி செலுத்தவில்லை என்பதால் இந்தியன் வங்கி சார்பில் நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கியில் பெற்ற ரூ.120 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இண்டியன் வங்கி ஜப்தி செய்துள்ளது. சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடை என்றாலே திரைக்கு வந்த அங்காடி தெரு என்ற படம் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.
இத்தகைய கடையை வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரங்கநாதன் தெருவில் உள்ள கடை மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடை கட்டடம் உள்ளிட்டவைகளும் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியன் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது நீதிமன்ற உத்தரவின் பேரிலே கடைகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் சற்று பதற்றம் நிலவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது