நாம் தொழுகின்ற கடவுள்கள் பலவித பெயர்களில் இருக்கின்றனர். அதில் வீரத்திற்கும், தைரியத்திற்கும் நாம் மனதார தொழுகின்ற ஒரு தெய்வம் ஆஞ்சநேயர். எந்தவித காரிய தடையாக இருந்தாலும், மனதில் சஞ்சலம் இருந்தாலும், நீங்கள் நினைக்கும் காரியத்தை வெற்றி பெறுவதாக இருந்தாலும் ஆஞ்சநேயரை வணங்குவது தான் சாலச் சிறந்தது. அதிலும் ஏதேனும் பரிகாரம் என்றால் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராமஜெயம் எழுதி அதனை மாலையாகத் தொடுத்தும், அல்லது வெற்றிலை மாலையை அணிவித்தும் பூஜை செய்வது வழக்கமாக இருக்கிறது. இவ்வாறு செய்வதன் காரணம் என்ன? இதனை செய்வதன் மூலம் எப்படி அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கிறது? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.நமது புராணக் கதைகள் தான் நம் முன்னோர்களைப் பற்றியும், நமது தெய்வங்களைப் பற்றியும் நமக்கு உணர்த்துகின்றன. அவ்வாறு இராமாயணம் உருவான கதையின்படி ராவணன் சீதா பிராட்டியை கடத்திச் சென்று இலங்கையில் வைத்திருந்தான். இதனை அறிந்த ராமபிரான் வான் படைகளின் உதவியுடன் சீதா பிராட்டியை மீட்டெடுக்க வேண்டும் என்று போராடி கொண்டிருந்தார்.அச்சமயம் இலங்கைக்கு செல்வதற்கு வழி புரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சீதா பிராட்டியின் நிலை அறியாமல் ராமர் மிகவும் அச்சத்தில் இருந்தமையால், அவரது தீவிர பக்தரான ஆஞ்சநேயர் பறந்து சென்று, மாறு வேடமிட்டு சீதாபிராட்டியின் முன் நின்றார். ஆஞ்சநேயரை கண்ட சீதா அவர் ஆஞ்சநேயர் என்பதை உணர்ந்துகொண்டு, ராமபிரான் எவ்வாறு இருக்கிறார் என்ற கேள்வியை கேட்கிறார்.அதற்கு ஆஞ்சநேயர் ராமர் மிகவும் வருத்தத்தில் வாடி இருக்கிறார். ஆனால் இந்தப் போராட்டத்தில் ஸ்ரீராமஜெயம். ராமர் தான் வெற்றி பெறுவார் உங்களை அவரே வந்து அழைத்துச் செல்வார் என்று கூறுகிறார். உடனே கீதா தனது அருகில் இருந்த ஒரு கொடியில் இருக்கும் இலையைப் பறித்து ஆஞ்சநேயரிடம் கொடுக்கிறார். உடனே அதனை எடுத்துச் சென்று ஆஞ்சநேயர் ராமர் முன் நிற்க்கிறார்.ராமர், சீதா கொடுத்த இலையை கையில் பெற்றுக் கொள்கிறார். அதன் பிறகு சீதா பிராட்டியை விடுவித்து, திரும்பி வரும்பொழுது அந்த இலையை சீதா தேவியின் கையில் வைத்து, இருவரும் சேர்ந்து அந்த இலையின் மூலம் ஆஞ்சநேயரை ஆசீர்வாதம் செய்கின்றனர். இதன் மூலம் இந்த வெற்றிப் பயணத்தில் பங்கு கொண்ட இந்த இலைக்கு வெற்றிலை என்ற பெயர் வந்தது.இது சீதா தேவியின் கை பட்டதால் லட்சுமி கடாட்சமும் பெற்றுள்ளது. எனவே இதனை மங்களகரமான அனைத்து விஷயத்திலும் முதல் பொருளாக பயன் படுத்துகிறோம். அதுமட்டுமல்லாமல் இது வெற்றியின் பரிசாக ஆஞ்சநேயருக்கு ஆசீர்வதிக்கப்பட்டது எனவே வெற்றிலை மாலை அணிவித்து ஆஞ்சநேயரை வழிபட அனைத்து காரியத்திலும் வெற்றி பெற முடியும். அதுபோல ஸ்ரீ ராமஜெயம் எனும் வார்த்தையை ஆஞ்சநேயர் வெற்றிக்கு அடையாளமாக குறிப்பிட்டுள்ளார். எனவே ஸ்ரீராமஜெயம் எழுதி மாலை அணிவித்து ஆஞ்சநேயரை வணங்குவதன் மூலம் நினைத்த காரியம் அனைத்தும் சிறப்புடன் நடைபெறும்.