12ம் வகுப்பு மாணவி ஷாலினி கொலை:
காதலை ஏற்காததால் இளைஞர் வெட்டி கொன்ற கொடூரம் – உறவினர்கள் காவல் நிலையம் முன்பு மறியல்
சேரங்கோட்டை (ராமநாதபுரம்):
ராமநாதபுரம் மாவட்டம் சேரங்கோட்டை பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் ஓர் இளைஞர் கோபத்தின் உச்சத்தில் ஷாலினியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டி கொலை செய்திருப்பது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
மாணவி ஷாலினி தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, குறித்த இளைஞர் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. கடுமையான காயங்களால் ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சேரங்கோட்டை காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“கொலை செய்த இளைஞரை உடனே எங்களிடம் ஒப்படையுங்கள்!” என கோரிய அவர்கள், தீவிர கோஷங்கள் எழுப்பினர்.
காவல்துறையினர் அதிக பாதுகாப்பு வழங்கி நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு, பள்ளி மாணவிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் தீவிரமான கேள்விகளை எழுப்பும் சம்பவமாக இந்த கொலை பார்க்கப்படுகிறது.
Cherangottai (Ramanathapuram):
A shocking incident unfolded in Ramanathapuram district after a Class 12 student, Shalini, was brutally murdered by a young man for rejecting his love proposal.
According to police sources, the accused intercepted Shalini on her way to school and attacked her with a sharp weapon. She succumbed to her injuries at the spot.
Following the tragic incident, over 100 relatives and local residents gathered in front of the Cherangottai police station, staging a massive protest. They demanded that the police immediately hand over the accused to them.
Police security was tightened, and efforts are underway to arrest the suspect at the earliest.
This incident has once again raised serious questions about the safety of young girls and school students in Tamil Nadu.
Comments are closed, but trackbacks and pingbacks are open.