சென்னை: தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது நமது கடமை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.கடந்த முறை தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் தமிழகத்தில் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தின. அது போல் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கும் டிரென்டானது.ஜம்மு காஷ்மீர்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- மாஜி முதல்வர்கள் கைது- யெச்சூரி கண்டனம் இதற்கு பாஜக கடும் விமர்சனங்களை முன் வைத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.பாஜகமேலும் மோடி பொங்கல் என்ற நிகழ்ச்சிக்கும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் வைரலானது. இதை தற்போதே நிறைய பேர் பதிவிட தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்திருந்தார்.விருந்தினர்அப்போது அவர் கூறுகையில் தமிழகத்திற்கு விருந்தினராக வருகை தரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை. திமுக எந்த கட்சிக்கும் எதிரியிலலை என்றார். இதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நகைச்சுவையாக உள்ளதாக தெரிவித்தனர். எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி தமிழகத்தின் விருந்தினர் என திமுகவுக்கு தெரியவில்லையா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.ஆளுங்கட்சிஅது போல் எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என திமுக இரட்டை வேஷம் போட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கருப்பு கொடி காட்டியதும் கோ பேக் மோடி என்றதும் தவறு என திமுக ஒப்புக் கொள்கிறதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.கோ பேக் மோடிஇப்படியாக கருப்புக் கொடி குறித்து கோ பேக் மோடி குறித்தும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது. மாநில திட்டங்களை தொடங்குவதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நம் கடமை. அரசியல் கருத்தியல் என்பது வேறு என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்..: