Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மறுபடியும் மொதல்ல இருந்தா.. ராகுலின் திடீர் \”தனிப்பட்ட\” டூர்.. விமர்சனங்களால் குத்தி கிழிக்கும் பாஜக

0

டெல்லி: ராகுல் காந்தி திடீரென நேற்றைய தினம் இத்தாலி புறப்பட்டு சென்றார்.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவர் சென்றிருக்கிறார் என்றபோதிலும், அங்கேயே அவர் சில நாட்கள் தங்கி இருப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.. ராகுலின் இந்த திடீர் பயணம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.இன்னும் சில மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க போகிறது.. எனவே மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக வியூகம் அமைத்து வருகிறது..அதேசமயம், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது… இதற்காக பிரியங்கா காந்தி கடந்த ஒரு வருடமாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.. ஒற்றைக்காலில், கொட்டும் மழையில் கெத்து காட்டிய போட்டியாளர்… இதுதான் மாஸ் டாஸ்க்இத்தாலிஇந்தநிலையில் ராகுல் காந்தி திடீரென இத்தாலி புறப்பட்டு சென்றுள்ளார்.. நாளைய தினம் அங்கு நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார் என்றும், அங்கு அவர் சில நாட்கள் தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது.. ராகுலின் இந்த பயணம், பாஜக, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது..தீபாவளிஇப்படித்தான், கடந்த மாதம் தீபாவளிக்கு முன்பாக ராகுல்காந்தி லண்டன் சென்றிருந்தார்… ஒரு மாதம் கழித்துதான், நாடு திரும்பினார்… பிறகு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டு, பாஜகவுக்கு எதிர்வினையாற்றினார்.. 12 எம்பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்திலும் பங்கேற்றார்… இப்போது மறுபடியும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்..ட்வீட்ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் வெளிநாட்டுக்கு சென்று உள்ளார்… காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேலால் இது பற்றி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், “தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி இத்தாலி சென்றிருக்கிறார்.. அவரது இந்த பயணம் பற்றி தேவையில்லாமல் பாஜக போன்ற கட்சிகள் வதந்தியை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்..ஒத்திவைப்புஇதையடுத்து, பஞ்சாப்பில் நடக்கும் பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது… மோகா மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி காங்கிரஸ் கட்சி பிரமாண்ட பேரணியை நடத்துவதாக இருந்தது… இந்த பேரணியை ராகுல் காந்தி துவக்கி சிறப்புரையாற்ற போகிறார் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. ஆனால், வரும் 5-ந் தேதி பாஜக, இதே பஞ்சாப்பில் பிரமாண்ட கூட்டம் நடத்த போகிறது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.திடீர் பயணம்என்றாலும் ராகுலின் பயணம் பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.. ஏற்கனவே முக்கியமான நேரங்களில் எல்லாம் ராகுல், வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார் என்ற விமர்சனங்கள் உள்ளது.. மிக முக்கியமான தேர்தல் சமயத்தில், பிரச்சார கூட்டங்களை தள்ளி வைத்துவிட்டுதான் இத்தாலிக்கு போக வேண்டுமா? என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.. சிஏஏ போராட்டம் டெல்லியில் தீவிரமாக இருந்தபோதும் சிங்கப்பூருக்கு சென்றார்…தேர்தல்கள்மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்த போதும், தாய்லாந்து சென்றார்.. கடந்த வருடம் டிசம்பரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்திலும் இத்தாலிக்கு சென்றார்…5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியும் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் ராகுல் இத்தாலி செல்ல வேண்டுமா? என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள்…பாட்டிஇத்தாலியில் சோனியா காந்தியின் அம்மா மற்றும் உறவினர்கள் வசித்து வருவதாலும், பாட்டி மீது ராகுலுக்கு பாசம் அதிகம் என்பதாலேயே இத்தாலி பயணத்தை ராகுல் அடிக்கடி மேற்கொண்டுள்ளார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்… அதேசமயம், ஒமைக்ரான் வகை வைரஸ்களால், ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன… இந்த அபாயகரமான நேரத்தில் வெளிநாட்டு பயணத்தை ராகுல் தவிர்த்திருக்கலாமே என்றும் கருத்து கூறுகின்றனர்.:,: ,

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்