பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி இல்லை என்றால் பெரோஸ்பூர் காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இதற்காக அவர் பஞ்சாப் செல்ல முற்பட்டார்.சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த் அப்போது மோசமான வானிலை நிலவியதால் பஞ்சாப்பிற்கு செல்லும் ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்தார். இதையடுத்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.பஞ்சாப் பயணம் ரத்துஅப்போது ஹூசைனிவாலா பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் விமான நிலையம் சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் விமான நிலையம் வரை என்னை உயிருடன் அனுப்பியதற்கு நன்றி கூறுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாதுகாப்பு குறைபாடுபிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கு உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளிக்கையில், பிரதமரின் வருகையின் போது எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை. எனது செயலாளருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் பிரதமரை வரவேற்க என்னால் செல்ல முடியவில்லை.ஹெலிகாப்டர் பயணம்பிரதமர் வருகையையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி கடைசி நேரத்தில் சாலை பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்யுமாறு நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தோம். இதை பாஜக அரசியலாக்குவதாக தெரிவித்தார்.உலகம் முழுவதும் பிரதமர் பயணம்நாட்டின் பிரதமர் அவரது பாதுகாப்பில் இத்தனை குளறுபடியா என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக ஊடகங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டன. அதில் சிறப்பு விருந்தினர்கள், உலகம் மற்றும் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளார். சில இடங்களில் அவருக்கு பிடித்தமானவர்கள் இருப்பார்கள். சில இடங்களில் அவருக்கு பிடிக்காதவர்கள் இருப்பார்கள். ஆனால் இதுவரை பாதுகாப்பு குளறுபடி என்பது ஏற்பட்டதே இல்லை.பெரோஸ்பூர் எஸ்எஸ்பிபஞ்சாப் முதல்வர் சன்னி சொல்லுவதை போன்று பாதுகாப்பில் குறைபாடு இல்லாமல் இருந்திருந்தால் எதற்காக பெரோஸ்பூர் எஸ்எஸ்பி எந்த வித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? தங்கள் மாநிலத்துக்கு வரும் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையின் கடமையாகும். அவ்வாறிருக்கும் போது பிரதமர் செல்லும் பாதை என தெரிந்தும் அங்கு போராட்டக்காரர்களுக்கு அதுவும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது.டிவி விவாதங்கள்முதல்வர் சன்னி சொல்வது போல் கடைசி நேரத்தில் பிரதமரின் வான்வழி பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமான பயணத்திற்கு மாற்றியிருந்தால் அது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் அந்த இடத்திற்கு போராட்டக்காரர்கள் எப்படி வந்தார்கள்? என தொலைகாட்சிகளில் விவாதங்கள் நடத்தப்பட்டது.?.:
Prev Post
Next Post