திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி தெருவில் இருக்கும் சங்கிலி முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம்போல் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டுஊழியர்கள் சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலில் பின்புறம் கேட் வழியாக சென்ற அர்ச்சகர் முன்புறம் கேட் மற்றும் மூலஸ்தானம் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மூலஸ்தானத்தில் சென்று பார்த்து போது மூலவர் அம்மன் மற்றும் உற்சவர் சிலைகளில் இருந்த தாலி திருட்டுப் போயிருந்ததும், மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோவில் அர்ச்சகர் கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து கண்டோன்மெண்ட் போலீசார் மற்றும் உதவி ஆணையர் யாசின் பானு, இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், வீரசோலை ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அம்மன் கழுத்தில் இருந்த 3:30 பவுன் தாலி திருட்டுப் போனது தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர் . மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களைசோதனை செய்தபோது எதுவும் இயங்கவில்லை என்பது தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து கண்ட்ரோல்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சாமி கழுத்தில் இருந்த நகையை திருடி சென்ற மர்ம அசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.