Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் சார் பதிவாளர் முரளியுடன் கூட்டுச் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்த மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு..!!!

0

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களும். 408 பஞ்சாயத்துகளும் உள்ளன.

 

இதில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 25 பஞ்சாயத்துக்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட உள்ளூர் திட்டக் குழுமத்திலிருந்து வழங்கப்படும் In Principle Order/Frame work order-ன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலரால், மனை வரன்முறை கோரி வரும் மனுதாரர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன்பேரில் மனுதாரர்களிடமிருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய கூராய்வு கட்டணம், வரன்முறை கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு மனைகள் வரன்முறை செய்து வட்டார வளர்ச்சி அலுவலரின் செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட மனைகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரால் சம்மந்தப்பட்ட சார் பதிவகங்களுக்கு (திருச்சி 3 -ம் இணை சார் பதிவு அலுவலகமும் மற்றும் உறையூர் சார் பதிவு அலுவலகமும்) சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான உத்தரவு திருச்சி, இணை-III சார் பதிவகத்திற்கு அனுப்பப்பட்டு அரசு விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக, திருச்சி இணை-III சார் பதிவகத்தில் கடந்த 31.08.2021 முதல் 05.07.2023 வரையிலான காலகட்டத்தில் பணிபுரிந்த சார் பதிவாளர் திரு. C. முரளியுடன் வழக்கறிஞர்கள் திரு.கங்காதரன், திரு.பிரபு, திரு.சக்திவேல் மற்றும்
திரு.சையது அமானுல்லா, திரு.முகமது சலீம், திரு.முகமது உவைஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சட்டத்திற்கு முரணான செயலை, சுயலாபம் அடைய வேண்டி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்த வேண்டிய குற்ற சதியில் ஈடுபட்டும் அதன் தொடர்ச்சியாக அடிமனை வரன்முறைபடுத்தப்படும் உத்தரவை போலியாக ஏற்படுத்தியும், சார்பதிவாளர் திரு.முரளிக்கு தெரிந்தே போலியான ஆவணங்களை பதிவு செய்துள்ளனர்.

போலியான ஆவணம் என தெரிந்தே வீட்டு மனை வரன்முறை செயல்முறைகளை பரிசீலிக்காமல் 24 ஆவணங்களை பத்திரப் பதிவு செய்ததன் மூலம் வழக்கறிஞர் திரு.கங்காதான் என்பவர் மூலம் ரூ.44,100/-ம், வழக்கறிஞர் திரு.பிரபு என்பவர் மூலம் ரூ.31780/-ம், வழக்கறிஞர் திரு.சக்திவேல் என்பவர் மூலம் ரூ.36190/-ம், மற்றும் திரு.சையது அமானுல்லா என்பவர் மூலம் ரூ.40950/-ம், திரு.முகமது சலீம் என்பவர் மூலம் ரூ.27860/-ம் மற்றும் திரு.முகமது உவைஸ் என்பவர் மூலம் ரூ.32525/-ம் ஆக கூடுதல் ரூ.2,13,405/- மதிப்பில் அரசுக்கு வீட்டு மனை வரன்முறை கட்டணம் செலுத்தாமல் நிதியிழப்பு ஏற்படுத்தி சார் பதிவாளர் திரு.முரளி குற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளார்

மேலும், சார் பதிவாளர் திரு.முரளி கூட்டுச்சதி செய்து அரசு ஸ்டாம்ப்புகளைப் போல் போலியான ஸ்டாம்ப்புகளையும், போலி முத்திரைகளையும் தயார் செய்து, அவற்றை அரசு முத்திரைகளைப் போல பயன்படுத்தியும், ஏமாற்று வேலை, மோசடியாக போலியான ஆவணங்களை தயார் செய்து அவற்றை உண்மையான ஆவணங்களைப் போல பயன்படுத்தி ஆவணங்கள் செய்துள்ளார்.

மேற்படி குற்றங்கள் செய்ய தூண்டுதல் செய்தும், உடந்தையாக இருந்தும், கூட்டுச் சதியில் ஈடுபட்டும் மேற்படி ஆவணப் பதிவிற்கு தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என தெரிந்தே பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.2,13,405/- (ரூபாய் இரண்டு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்று ஐந்து) அளவில் நிதி இழப்பு ஏற்படுத்தியதற்கான போதிய முகாந்திரம் உள்ளதால் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு, 13(2)r/w 13(1)(a) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 120(B), 259, 260, 420, 465, 468 மற்றும் 471 உ/இ 109-படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்