திருச்சி பொன்னேரி புரத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் வயது 25 தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது இதில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் திருச்சி பொன்மலை பட்டியில் கடைவீதியில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இரவு சின்ராஜ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் அந்த வழக்கில் அலெக்ஸ் சரத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் இப்போது கொலையானவர் அலெக்ஸ் தம்பிதான் பெலிக்ஸ் .மேலும் இதற்கு முன்பு கொலை செய்யப்பட்ட சின்ராஜ் இறுதி அஞ்சலி போஸ்டரில் விரைவில் என்ற சூட்சம வார்த்தையை குறிப்பிடப்பட்டிருந்தது அந்த சின்ராஜ் இன் கொலைக்கு பழிக்குப்பழியாக அலெக்ஸின் தம்பி பெளிக்ஸ் வெட்டி படுகொலை செய்துள்ளனர் மேலும் இந்தக் கொலைகள் இத்துடன் முடியுமா அல்லது இன்னும் தொடருமா என்று தெரியாத அளவில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் இந்தக் கொலைக்குப் பின்னால் எட்டு பேருக்கு மேல் உள்ள ஒரு கூட்டம் செயல்பட்டு உள்ளதாக தெரியவருகிறது இதில் தற்போது இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் போலீசார் அந்த கும்பல் இரண்டு நாட்களாக போனில் மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது ஏன் பெளிக்ஸ் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார் என்பது மர்மமாக உள்ளது தகவல் தெரிவித்து இருந்தால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று காவல்துறையினர் தரப்பு கூறுகிறது