திருச்சி, மார்ச் 27 :
திருச்சி தொகுதியில் மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை கடந்த 20 ஆம் தேதி முதல் அந்தந்த தொகுதியில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்தனர். புதன்கிழமை 27 ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுவுக்கான காலக்கெடு நிறைவடைந்தது. இந்நிலையில் இதுவரை திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 48 வேட்பு மனுக்கள் பெறப் பட்டுள்ளது. அதில் புதன்கிழமை மட்டும் 29 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஒரே வேட்பாளர் இரண்டு வேட்புமனுக்களும். மாற்று வேட்பாளர் மனுவும் வழங்கியுள்ளனர். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
Prev Post