Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

TRICHY NEWS 14/3/2023

0

கல்லூரிக்குள் புகுந்து.
திருச்சி மாணவியை கடித்த விஷப்பாம்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (வயது 18). இவர் திண்டுக்கலில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். வாரத்தில் முதல் நாள் என்பதால் கல்லூரியில் அசம்பிளி ஹாலில் கூடுவது வழக்கம். அதன்படி இன்று காலை அனைத்து மாணவிகளும் அந்த அரங்கில் ஒன்று கூடினர். கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் பேசிக் கொண்டு இருந்தபோது கூட்டத்துக்குள் கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு புகுந்தது.

இதனால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். அப்போது வேகமாக சென்ற பாம்பு மீனாவை கடித்தது. இதனால் அவர் கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து மீனாவை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். மேலும் கல்லூரி ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். இறந்த பாம்புடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மீனாவை சிகிச்சைக்கு கொண்டு வந்து டாக்டரிடம் அந்த பாம்பையும் காண்பித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் மு க ஸ்டாலினை பற்றி விமர்சனம்
எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்…
அமைச்சர்.கே.என். நேரு பேட்டி

 

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள்வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்..

பிறகு அமைச்சர் கே என் நேரு நிருபர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது

திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான பிரத்தேகமாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் கலந்து கொண்டது. இதில் 19 நிறுவனங்கள் திருச்சியை சேர்ந்தவை ஆகும்.மேலும் இந்த முகாமில் பதிவு செய்தவர்கள் 154 பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் முதல்கட்டமாக 15 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சான்றிதழ்களையும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது புதிய வகையான காய்ச்சல் பரவி வருகிறது ,அதற்கு தடுப்பு நடவடிக்கை என்ன எடுத்து உள்ளீர்கள் என்ற கேள்வி கேட்டதற்கு
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இது குறித்து தெளிவாக தெரிவித்துள்ளார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக எடுக்கப்பட்டு
வருகிறது.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசி வருகிறார் , இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டதற்கு
ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று எங்களை போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .ஆனால் நாங்கள் யாரும் ஆர்ப்பாட்டமும், போராட்டமோ நடத்தவில்லை நீதிமன்றத்தை மட்டும் தான் அணுகினோம்.
எடப்பாடி பழனிச்சாமியின் தரம் அவ்வளவுதான். அவர் அப்படித்தான் பேசுவார் என கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ,மாநகராட்சி மேயர் அன்பழகன், அமைச்சர் மஸ்தான் , உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்