திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் ஒரு மினி பஸ்ஸில் இன்று காலை சமயபுரம் நோக்கி புறப்பட்டனர். பஸ்சை உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ் திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது.
பஸ்சுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், அதில் மோதாமல் இருப்பதற்காக ஹரி ஹரி கிருஷ்ணரும் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ் சென்டர் சென்டர் மீடியனில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி மினி பஸ் டிரைவர் மற்றும் இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. படுகாயம் அடைந்தவர்களை
அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காயம் இன்றி தப்பியவர்கள் வேறு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணத்துக்கு புறப்பட்டு சென்றனர்
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணக்கோஸ்டி சென்ற மினி பஸ் சாலைகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது