திருச்சியில் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு ரவுடிகள்
போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திருச்சி மார்ச் 4 திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 35)இவர் சிந்தாமணி கல்யாணராமன் கோவில் தெரு பகுதியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சி செய்தனர். இதை யடுத்து அவர்கள் 2 பேரையும் திருச்சி கோட்டை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த சிவகுரு (வயது 23) சூர்யா (வயது 20) என்பது தெரிய வந்தது. இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர். இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்துள்ளனர். சிவகுரு உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.