திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையான அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர் டாக்டர் கோகுல். தொடக்கம் முதல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் டாக்டர் கோகுல், மருத்துவ கல்லுாரி டீன், கண்காணிப்பாளர், துறை தலைவர் என எவரையும் மதிப்பதில்லை என்று குற்றச்சாட்டு உண்டு. இ.என்.டி. பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் தொடர்பாக பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்கும் போது டீன், துறைத்தலைவர் ஆகியோரிடம் தகவல் கூட சொல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதில் கவனமாக செயல்படுகிறார். இவரைப் பற்றி மருத்துவ கல்லூரி டீன் இடம் பலமுறை புகார் கூறப்பட்டுள்ளது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாதது என்ன காரணம் என்று தெரியவில்லை பின்னால் அரசியல் பலம் உண்டா அல்லது திருச்சியில் உள்ள முக்கிய புள்ளிகளை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற அராஜகங்கள் இல் ஈடுபடுகிறார் இவர் மீது மருத்துவத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்குமா. என்று மருத்துவ மனை நிர்வாகத்தினர் எதிர்பார்ப்பு