Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பெண் ஆடிட்டரிடம் ரூ 1.88 கோடி மோசடி

0

திருச்சி பிப்.16 :

திருச்சியில் பெண் ஆடிட்டரிடம் ரூ.1.88 கோடி மோசடி செய்ததாக, துணை நடிகரின் மனைவி கைது செய்யப்பட்டார் மேலும் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் பால் பண்ணை அருகே விஸ்வாஸ் நகர் 2 ஆவது குறுக்குத்தெரு, ராஜாளி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி சீதா (52). ஆடிட்டரான இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த துணை நடிகரும் குறும்பட இயக்குநருமான மதியழகன் என்பவரின் மனைவி மாலதி (44) அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவரிடம் இணைய வழி (ஆன்லைன்) வர்த்தகம் செய்தால் அதில் அதிக அளவில் லாபம் கிடைக்கும் எனக்கூறியுள்ளார். அதை நம்பிய சீதா, கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு தவணையாக ரூ.1.88 கோடியை, மாலதி கூறியபடி அவர் கூறிய கணக்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால், குறிப்பிட்டபடி லாபமோ, முதலீடு செய்த பணத்தையோ அவர் திருப்பிக்கொடுக்கவில்லை.

இது குறித்து, கேட்டபோது அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். எனவே சீதா திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் பெரியசாமி வழக்குப்பதிந்து நடிகரின் மனைவி மாலதியை வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அவரது மகனும் ஆட்டோ ஓட்டுநருமான நடராஜன், அவரது உறவினர் ஜெயக்குமார் உள்ளிட்டோரையும் போலீஸர் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட மாலதி, இரு தினங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்ததாக கூறி போலீஸரால் மீட்கப்பட்டவர். இவர் இதேபோல பலரிடம் கடன் பெற்றும், ரியல் எஸ்டேட் செய்வதாகவும் கூறி ஏமாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்