ஆதார் அதிருச்சியில் போலிட்டை போலி வாக்காளர் அட்டை அதிகமாக வெளி வந்து கொண்டிருக்கிறது கண்டு கொள்வார்களா காவல்துறையினர் மற்றும் உளவுப் பிரிவினர்
திருச்சியில் போலி பத்திரங்கள் பதிவு செய்வதற்காக போலி ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டை மறைமுகமாக நடந்து கொண்டிருந்தது தற்போது நில புரோக்கர்கள் அதிகரித்ததால் நிலத்தின் உரிமையாளர்கள் வெளியூரில் இருந்தாள் அவர்களுடைய போலியான ஆவணங்கள் தயார் செய்து விற்று விடுகிறார்கள் இதை வாங்குவதற்கு என்று சில முக்கிய புள்ளிகள் உள்ளன குறைந்த விலைக்கு பிறகு அதனை பேங்கில் அடகு வைத்து வாங்கிய விலையை காட்டிலும் அதிகமான பணத்திற்கு அடகு வைப்பதும் அல்லது மற்றொரு நபருக்கு அதிக விலைக்கு விற்பதும் ஆக செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது.இது ஒருபுறம் இருக்கட்டும் இதேபோல ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டை தயாரித்து சமூக விரோதிகள் உள்ளே புகுந்தால் என்ன செய்வது எப்படி கண்டுபிடிப்பது இப்படி போலியாக செய்யப்படும் செயல்கள் அனைத்தும்.நாட்டிற்கு அமைதிக்கு எதிராக போய் முடியும் .மேலும் இதுபோன்று போலி ஆவணங்கள் மூலம் ரிஜிஸ்டர் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் காவல்நிலையத்திற்கு வரும்பொழுது காவல்நிலைய அதிகாரிகள் இந்த போலிப் ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டையை பற்றி கவலைப்படுவதில்லை அதற்கு பதிலாக கோர்ட்டுக்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று முடித்து வைக்கப்படுகிறது எல்லாம் பணம் செய்யும் வேலை.அப்படி இருப்பினும் உளவு பிரிவினர் ஏன் இதில் அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள் சமீபத்தில் மணிகண்டம் பகுதியில் தங்கியிருந்த பங்களாதேஷ் நபர்களிடம் இந்திய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையும் இருந்து உள்ளது.இது போன்ற நிகழ்வு திருச்சியில் மட்டும் அல்ல திருப்பூர் போன்ற எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது .இதற்காகவே கியூ பிராஞ்ச் என்ற ஒரு உளவுப் பிரிவு அமைப்பும் இருக்கிறது.இருந்தாலும் திருச்சியில் தற்போது வரை இந்த தொழில் களைகட்டி வருகிறது.ஒரு போலியான ஆதார் அட்டை தயாரிக்க 50 ஆயிரம் வரை செலவு செய்கிறார்கள் போலியான ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை வைத்து பாஸ்போர்ட் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.இங்க தீவிரவாத செயல் செய்து விட்டு தலைமறைவாக இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது ஆகவே காவல்துறையினரும் மற்றும் உளவுப் பிரிவினரும் உடனடியாக களத்தில் இறங்கி நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை போக்கி அமைதியை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்ற செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது இந்தப் போலி ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டை செய்யும் குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இது கேள்விக்குறியாக மாறும்.