இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது இரவு நேரம் என்பதால் இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போராட்டத்திற்கு விடியல் கிடைக்கும் என்பது தற்போது நிரூபித்து காட்டிய இனிக்கோ இருதயராஜ் எம்எல்ஏ அவர்கள்
திருச்சியில் உள்ள இரண்டு திமுக அமைச்சர்களையும் ஓரங்கட்டி முன்னேறி வரும் எம் எல் ஏ
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக பல முக்கியமான இடங்களில் பணி நடைபெற்றது இதில் சேதம் அடைந்த ரோட்டினை போடுவதற்கு காலதாமதம் ஆன காரணத்தினால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவும் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளானார்கள். இதை கண்டுகொள்ளாத மாநகராட்சியை கண்டித்து பிஜேபி மற்றும் கம்யூனிஸ்டுகள் பொதுமக்கள் என பலரும் போராட்டமும் புகார்களும் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்த மாநகராட்சியை ஒரே நாள் இரவில் ஆர்ப்பாட்டம் நடத்தி இரவோடு இரவாக
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களின் தலைமையில் ரோடு போட வைத்த கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் அவர்களின் ஆதரவாளர்கள் மார்தட்டி கொள்கிறார்கள். உண்மையில் இது பாராட்ட வேண்டிய விஷயமாகத்தான்உள்ளது.இது ஒரு புறம் இருக்கட்டும்.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சியின் எம்எல்ஏவாக இருக்கும் பொழுது அவரிடம் எந்த ஒரு கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்தப் போராட்டத்தை நடத்தி இருப்பது பெரும் சர்ச்சையாக தற்போது வெடித்துள்ளது
ஒரே நாள் இரவில் போராட்டத்தை வெற்றி பெற செய்ததனால் பொது மக்களின் பார்வை அனைத்தும் புதிதாக வந்த எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ் அவர்களின் பக்கம் திரும்பி உள்ளது. என்பது உண்மை
எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ் அவர்கள் இப்படி இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றியும் கிடைத்தது என்பதை பார்க்கும் பொழுது திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்களையும் ஓரங்கட்டும் அளவிற்கு தன்னை வளர்த்திக் கொண்டு இருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது திமுக தொண்டர்களால் எம்எல்ஏவான இனிகோ இருதயராஜ் அவர்கள் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடைய ஆதரவும் இல்லாமல் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது
தற்போது மாநகராட்சி நிர்வாகம் முழுவதும் எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ் அவர்களை கண்டால் பயம் கலந்த மரியாதை கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். என்பது தற்போது மாநகராட்சியில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.