Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் முழுவதும் சாலையாகவே மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்…

0

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் முழுவதும் சாலையாகவே மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்…

முறையாக ஆய்வு செய்யாத நீர்வள ஆதாரத்துறை, ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற் பொறியாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கைகோரிக்கை, வைத்துள்ளனர் சமூகஆர்வலர்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மேற்கு புறத்தில் உள்ள வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/1- ல் 0.2629.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/3- ல் 0.1833.0 சதுர மீட்டரில் அமைந்துள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் கடந்த ஆண்டு முதலமைச்சர் அவர்கள் தொடங்கப்பட்ட தூர்வாரும் பணியில் ஒரு பகுதியாக தூர்வாரப்பட்டு பயன்பாட்டில் இருந்த வாய்க்காலில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக சுமார் 30 அடி அகலமுள்ள வாய்க்கால் முழுவதும் கிராவல் மண் கொட்டி தார் சாலை அமைத்துள்ளனர்.

 

மேற்படி வாய்க்கால் முழுவதும் கிராவல் மண் கொட்டி சாலை அமைத்துள்ளதால் மழைக் காலங்களில் கருமண்டபம் மற்றும் செல்வா நகர் ஆகிய பகுதியிலிருந்து மழைநீர் வெளியேற வழி இல்லாததால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே நடந்துள்ள ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை செய்தி வெளியிட்டாலும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இருப்பதற்கு காரணம் என்ன என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்…

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்