Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உத்திரவிட்டும் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அளவீடு செய்ய மறுக்கும் டவுன் சர்வேயர் பரிமளா…!!!!

0

 

பணம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டுமே ஓடி ஓடி நில அளவீடு செய்வதாக புகார்…

திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 4/1- ல் 3.1607.0 சதுர மீட்டர் நிலமும், வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/1 -ல் 0.2629.0 சதுர மீட்டர் நிலமும், வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/3- ல் 0.1833.0 சதுர மீட்டர் நிலமும், மற்றும் வார்டு:AA, பிளாக்: 1, நகரளவை எண்: 1- ல் 2.9250.0 சதுர மீட்டர் நகரளவை எண்களில் வாய்க்காலில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது என அதை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் மனுக்கள் சென்றுள்ளது.

இது தொடர்பாக ஒவ்வொரு துறை அதிகாரிகளும் சம்பந்தபட்ட துறைக்கு புகார் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க குறிப்பாணை அனுப்பி உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மேற்கு வட்டாட்சியர் மற்றும் திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் ஆகியோர் ஆக்கிரமிப்பு குறித்து நில அளவை செய்து வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கை தர வேண்டுமென கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதே போல் மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆக்கிரமிப்பு குறித்து நில அளவை செய்ய டவுன் சர்வேயர் பரிமளா அவர்களுக்கு குறிப்பானை கடிதம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த இரண்டு குறிப்பானைகளை பெற்றுக் கொண்ட டவுன் சர்வேயர் பரிமளா மேல் அதிகாரிகளின் உத்தரவினை துளியும் மதிக்காமல், அக்கடிதங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு ஆக்கிரமிப்பு தொடர்பாக நில அளவீடு செய்யாமல் ஐந்து மாதங்களுக்கு மேல் காலம் தாழ்த்தி வருகின்றார்.

இது ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்று விட்டு அளவீடு செய்ய மறுக்கின்றாரோ என மனுதாரர் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

மேலும் டவுன் சர்வேயர் பரிமளா பணம் கொடுப்பதாக இருந்தால் மட்டும் ஓடி ஓடி நிலத்தை அளந்து கொடுப்பதாக மாநகர பகுதி மக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் மீது சில மாதங்களாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது .

இது தொடர்பாக நில அளவை துறை உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று விசாரித்தால் பரிமளாக்கு ஆளுங்கட்சி அரசியல் அதிகார பின்புலம் இருக்கிறது என்கின்றனர்.

இனியும் காலதாமதம் செய்யாமல் குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா வருவாய்த்துறை அதிகாரிகள்.

அதே சமயம் தனக்கான அரசு பணியில் மெத்தன போக்கையும், மேலதிகாரிகளின் உத்தரவை மதிக்காமலும், பணம் கொடுத்தால்தான் எதையும் செய்வேன் என்ற நிலைப்பாட்டை கடைபிடிக்கும்
திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்ட நகர சார் ஆய்வாளர் பரிமளா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்