Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

Trichy City News 5/04/2023

0

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
போலீசார் விசாரணை

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 39) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருச்சி- தஞ்சை மெயின் ரோட்டில் அரியமங்கலம் மால் அருகில் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி சென்ற முகமது அலி தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது அலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி நிர்மலா கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல கோடி மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த
தஞ்சை டிரான்ஸ்போர்ட் உரிமையாளரின் சகோதரர் கைது.

திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார். மேலும் தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக தெரிவித்தார். இதனை நம்பி தமிழகம் முழுவதும் நூற்றுகணக்கானோர் முதலீடு செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.19ந்தேதி கமாலுதீன் உயிரிழந்தார். இதனையடுத்து முதலீடு செய்தவர்கள் அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதார் அப்துல் கனி ஆகியோரிடம் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில்
இதுவரை சுமார் 6,131 பேரிடம், சுமார் 410 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதுவரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மோசடிக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கமாலுதீன் சகோதரர் அப்துல்கனி (வயது54) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்