Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி சிட்டி நியூஸ் 31/01/2023

0

திருச்சி கருமண்டபத்தில்ஓட்டல் ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு நான்கு பேர் கைது.

திருச்சி கருமண்டபம் பொன்னகர், 4 -வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாணிக்கராஜ் (வயது 25). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் குமரன், வீரபாண்டியன், கார்த்திக், தவசி ஆகிய நான்கு வாலிபர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி கருமண்டபம் பொன்னகர், 4 -வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாணிக்கராஜ் (வயது 25). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கருமண்டபம் பகுதி ஆர்.எம்.எஸ் காலனி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டி மாணிக்கராஜிடம் பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிந்து, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் குமரன், வீரபாண்டியன், கார்த்திக், தவசி ஆகிய நான்கு வாலிபர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டத

திருச்சியில் அடுத்தடுத்து துணிகரம்: 2 பெண்கள், முதியவரை தாக்கி வழிப்பறி கொள்ளை மர்ம நபர்கள்அட்டூழியம்

 

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரதுமகள் மகேஸ்வரி (வயது 47) இவர் பொன்மலை வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்ர் அந்தப் பெண்ணை தாக்கி கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் நடை பயிற்சி சென்ற திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தசுப்ரமணியன் மனைவி சாந்தா (வயது 76) என்ற பெண்ணிடமும் வழிப்பறி செய்ய முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர் .
மேலும் அரியலூர் திருமணப்பாடியைச் சேர்ந்த சார்லி ( வயது 73)
என்ற முதியவரிடம் சங்கிலியாண்ட புரம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இரும்பக் கம்பியால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்தும் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் அடுத்தடுத்து துணிகரம்:

2 அம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து கொள்ளை மாநகராட்சி பள்ளியிலும் மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சியில் இரண்டு அம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி கீழப்புதூரில் பாலக்காட்டு பகவதி அம்மன் கோவில், புத்தூர் குழுமாயி அம்மன் கோவில்

பகவதி அம்மன் கோவில்

திருச்சி கீழப்புதூரில் பாலக்காட்டு பகவதி அம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் நேற்று இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார் . காலையில் வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காஜா பேட்டையை சேர்ந்த மதுரை வீரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தூர் குழுமாயி அம்மன் கோவில்

இதேபோல் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 30 கிராம் வெள்ளி மற்றும் பூஜைப் பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் செயல் அலுவலர் புனிதா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சி பள்ளியில் கைவரிசை

இரண்டு அம்மன் கோவில்களை தொடர்ந்து திருச்சி காஜா பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் மர்ம நபர்கள் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர்.

 

திருச்சி பாலக்கரை காஜா பேட்டையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை கடந்த27-ந் தேதி தலைமை ஆசிரியர் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது லேப்டாப் இரண்டு மற்றும் டி.வி.டி பிளேயர், மைக் செட், வாளி மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

இதேபோல் திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் துவரங்குறிச்சியை சேர்ந்த அல்லாபக்ஸ் என்பவர் தனது காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த சாம்சங் டேப்பை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அல்லாபக்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்