திருச்சி, மார்ச் 27 :
திருச்சி விமான நிலையத்தில், ரூ.13.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதன்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணம் செய்விருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை, வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். அப்போது, பயணியொருவர் உரிய ஆவணங்களின்றி ரூ.13.70 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் (50,000) மற்றும் அமெரிக்க டாலர் (3,500) பணத்தாள்களை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Prev Post