அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு.
கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசும் பொழுது திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் திமுக அரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கஞ்சா, புகையிலை உள்ளீட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடியார் கூறினார்.ஆனால் இந்த அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது இந்த பிரச்சனை பெரிய அளவில் எழுந்துள்ளது. இளைஞர்களின் வாழ்வை கெடுக்கும் இந்த செயலுக்கும் இதற்கு துணை போகும் திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சமயபுரம் ராமு,சுந்தர்ராஜன், செந்தில், எனர்ஜி அப்துல்ரகுமான், எம்பி.பிரகாஷ்,புத்தூர் பாலு, ராம் வெங்கடேஷ், முத்துகுமார், வர்த்தகப் பிரிவு ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.