தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பியதாக குற்றம் சாட்டி யூடியூபர் மாரி தாஸ் வீடியோ வெளியிட்டதாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது அவர் சிறையில் உள்ளார் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் இறுதி விசாரணையை டிசம்பர் 23 தேதி ஒத்தி வைத்தார்